டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 10 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், 4ஆவது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து, அகமதாபாத் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.


