TCS, HCL ஊழியர்களின் தகவல் திருட்டு..? சைபர் அட்டாக் நடந்துள்ளதா..? டிசிஎஸ் முக்கிய அப்டேட்!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் ஊழியர்களின் அடிப்படை தரவுகள் சைபர் அட்டாக் மூலம் கசியக்கூடும் என்ற அச்சுறுத்தலும் இருப்பதாக எச்சரிக்கைகளைப் பெற்றுள்ளதாக திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இரு நிறுவனங்களும் தங்களுடைய கட்டமைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து அடுத்துடுத்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
ஏஐ காலத்தில் சைபர் செக்யூரிட்டி எந்தளவுக்கு முக்கியம் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்தி வரும் வேளையில் லட்சக்கணக்கான டெக் ஊழியர்கள் பணியாற்றும் டெக் நிறுவனத்தில் இத்தகைய அட்டாக் நடந்துள்ளது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் பங்குச்சந்தைக்கு அளித்த அறிக்கையில், சைபர் அட்டாக் குறித்து எங்களுடைய டிஜிட்டல் கட்டமைப்பில் ஆய்வு செய்த போது, இத்தாக்குதல் மூலம் கசியப்பட்ட தகவல்கள் மிகவும் பழையது, அதேபோல் தாக்குதலும் சிறிய அளவிலானது.
இந்த தாக்குதல் மூலம் எங்களுடைய கட்டமைப்பும், எங்களுடைய வாடிக்கையாளர்கள் கட்டமைப்பும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என தெரிவித்துள்ளது. ஆயினும் சைபர் தாக்குதல் குறித்த முழு விசாரணை செய்து சைபர் செக்யூரிட்டி கட்டமைப்பை மேம்படுத்துவது எங்களுடைய முக்கிய பணியாக உள்ளது என தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சைபர் அட்டாக் நடத்திருக்க கூடிய வாய்ப்புகள் உறுதியாகியிருந்தாலும், அட்டாக் நடந்திருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, இதேபோல் டிசிஎஸ் மற்றும் வாடிக்கையாளர் கட்டமைப்பும் எவ்விதமான பாதிப்பு ஏற்படவிவ்லை என தெரிவித்துள்ளது.
மேலும் கசியப்பட்டு இருக்க கூடிய வாடிக்கையாளர்கள் தரவுகள் 4 வருடத்திற்கு பழமையானது, இதேபோல் ஒரு சிறு பகுதி ஊழியர்களின் தரவுகள் மட்டுநே திருடப்பட்டு இருக்க கூடும் என டிசிஎஸ் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்களை டார்கெட் செய்து உலகில் பல நாடுகளில் இருந்து சைபர் அட்டாக் நடந்து வருகிறது, குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் இருந்து அட்டாக் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்களுடைய கட்டமைப்பை பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது.
இதனால் கடந்த சில வருடங்களாக சைபர் அட்டாக் நிகழ்வுகள் குறைந்துள்ளது. நியூஸ்9 வெளியிட்டுள்ள தகவல் படி இந்திய தளங்கள் அதிகளவில் சீனா, பாகிஸ்தான் நாட்டில் இருந்து அதிகப்படியான சைபர் அட்டாக் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.
