03
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை தற்போது ரயில்வே எளிதாக்கியுள்ளது. பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. முன்னதாக, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரம் காலை 11 மணிக்கு தொடங்கும். இந்நிலையில், தற்போது அந்த நேரம் ஒரு மணி நேரம் முன்பாக தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம். பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


