மேலும், குறிப்பிட்ட சில செலவுகளுக்கு 10% வரையிலான நியூ காயின்களை இதன் மூலமாக கார்டு ஹோல்டர்கள் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த நியூ காயின்கள் கார்டு ஹோல்டரின் NeuPass அக்கவுண்டில் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் செய்யப்படுகிறது. மேலும், இந்த காயின்களை Tata Neu அப்ளிகேஷன் அல்லது வெப்சைட்டில் கார்டு ஹோல்டர்கள் ரெடீம் செய்து கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்:
ரிவார்டு சிஸ்டம்:
டாடா நியூ இன்பினிட்டி SBI கார்டு 10% வரையிலான ரிவார்டுகளை வழங்குகிறது.
டாடா நியூ பிளஸ் SBI கார்டு 7% வரையிலான ரிவார்டுகளை வழங்குகிறது.
இந்த கார்ட்டை பயன்படுத்தி நீங்கள் உள்ளூர் மற்றும் வெளியூரில் செய்யும் செலவுகளுக்கு நியூ காயின்களை பெற்றுக் கொள்ளலாம்.
அன்றாட பேமெண்ட்டுகள்:
RuPayமூலமாக நீங்கள் செய்யும் UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு 1.5% வரை நியூ காயின்கள் வழங்கப்படும்.
Tata Neu பிளாட்ஃபார்ம் மூலம் செய்யும் செலவுகளுக்கு 5 சதவீதம் வரையிலான ரிவார்டுகள் கொடுக்கப்படுகிறது.
பிளாட்பார்ம் பலன்கள்:
ஏர் இந்தியா, பிக் பாஸ்கெட், குரோமா, தாஜ் ஹோட்டல்கள், டாடா 1MG, டைட்டன், தனிஷ்க், வெஸ்ட்சைட் மற்றும் Qmin போன்ற டாடா குழும பிராண்டுகளில் இந்த கார்டு பயன்படுத்தும்போது, உங்களுக்கு ரிவார்டுகள் கிடைக்கும்.
ஆண்டுவாரியான கட்டணம்:
பிளஸ் வேரியன்ட்டை பொறுத்தவரை ஓராண்டுக்கு நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வரை இந்த கார்டு மூலமாக செலவு செய்யும் பட்சத்தில் ஆண்டுவாரியான கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
இதுவே இன்ஃபினிட்டி வேரியன்ட்க்கு இது 3 லட்சம் ரூபாயாக நியமிக்கப்பட்டுள்ளது.
ஏர்போர்ட் லான்ச் அனுமதி:
டாடா நியூ பிளஸ் வேரியண்டில் ஒரு ஆண்டுக்கு 4 இலவச உள்ளூர் லான்ச் வசதி கொடுக்கப்படுகிறது.
மேலும் டாடா நியூ இன்ஃபினிட்டி வேரியண்டில் ஒரு ஆண்டுக்கு 8 உள்ளூர் மற்றும் 4 சர்வதேச லான்ச் அனுமதி கொடுக்கப்படுகிறது.
எரிபொருள் சார்ந்த பலன்கள்:
எரிபொருள்களுக்கு ஒரு சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.
மேலும், பிளஸ் வேரியண்டில் ஒரு மாதத்திற்கு இந்த வரம்பு 250 ரூபாய் ஆகவும், இன்ஃபினிட்டி வேரியண்டுக்கு ஒரு மாதத்திற்கு 500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஃபோரெக்ஸ் மார்க்-அப் கட்டணங்கள்:
டாடா நியூ பிளஸ்: 3.5 சதவீதம்
டாடா நியூ இன்ஃபினிட்டி: 1.99 சதவீதம்
இரண்டு வேரியண்டுகளையும் RuPay மற்றும் விசா நெட்வொர்க்கில் பெற்றுக் கொள்ளலாம். SBI கார்டின் வெப்சைட் பயன்படுத்தி ஆன்லைனிலோ அல்லது குறிப்பிட்ட சில குரோமா ஸ்டோர்களில் SBI கார்டு கடைகளில் இந்த கார்டுகளை வாங்கலாம்.
கார்டு வாங்கியவுடன் கிடைக்கும் ஆரம்பகட்ட பலன்கள்:
டாடா நியூ பிளஸ் SBI கார்டு: 499 ரூபாய் கட்டணம், இதில் 499 நியூ காயின்கள் கொடுக்கப்படுகின்றன.
டாடா நியூ இன்ஃபினிட்டி SBI கார்டு 1499 ரூபாய் கட்டணம், மேலும் 1499 நியூ காயின்கள் வழங்கப்படுகின்றன.
Read More