• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

TASMAC: முதலில் எந்த கடைக்கு டார்கெட்.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. கப்பு (பணம்) முக்கிய பிகிலு!! | Vijay Govt to Privatise Urban TASMAC Shops After 23 Years – Major Policy Shift in Tamil Nadu

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
TASMAC: முதலில் எந்த கடைக்கு டார்கெட்.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. கப்பு (பணம்) முக்கிய பிகிலு!! | Vijay Govt to Privatise Urban TASMAC Shops After 23 Years – Major Policy Shift in Tamil Nadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


TASMAC: முதலில் எந்த கடைக்கு டார்கெட்.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. கப்பு (பணம்) முக்கிய பிகிலு!!

இந்தியாவில் பல மாநில அரசுகள் மதுபான விற்பனையின் வாயிலாகவே பெருமளவிலான வருமானத்தை ஈட்டி வருகிறது. எரிபொருள் மற்றும் மதுபானம் ஜிஎஸ்டி கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால் மாநில அரசின் வரி சுதந்திரம் இதில் உள்ளது.

இந்த நிலையில் பட்ஜெட் அறிக்கையை தயாரிப்பதில் மும்முறமாக விஜய் தலைமையிலான அரசு இருக்கிறது. இதற்கிடையில் 23 ஆண்டுகளுக்கு பின்பு டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்குவது குறித்து முக்கியமான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2003ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் மாநிலம் முழுவதும் தனியார் மதுபான கடைகளை மூடிவீட்டு அரசு ஏற்று நடத்த TASMAC என்னும் அமைப்பை உருவாக்கியது.

TASMAC: முதலில் எந்த கடைக்கு டார்கெட்.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான்..  கப்பு (பணம்) முக்கிய பிகிலு!!

இதன் பின்பு தற்போது மிகப்பெரிய மாற்றம் விஜய் தலைமையிலான தவெக அரசின் காலத்தில் நடக்கிறது. மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்துவது சரியான செயல் இல்லை என தவெக அரசு கருதும் காரணத்தால் மதுபானத் தொழிலில் இருந்து வெளியேறி, அதனை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

இதை தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தில் உரிய திருத்தங்களை சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அதன் பின்பு தனியார்மயமாக்கும் பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய் முதல்வராக பதவியேற்றிய பின்பு 700க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளை மூடியது, டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பத்தை நிறுத்த உத்தரவிட்டது, இதன் வாயிலாக உருவான போராட்டம் என தொடர்ந்து டாஸ்மாக் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானசத்தையும், அதன் தரத்தையும் அதிகரிக்கும் வகையில் பல முக்கியமான மாற்றங்களை செய்து வருகிறது தவெக அரசு. தனியார்மயமாக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக நகரப்புறங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மட்டுமே தனியார்மயமாக்கப்பட தவெக அரசு திட்டமிட்டு உள்ளது.

தனியார்மயமாக்கினால் எப்படி அரசு வருவாய் ஈட்டும் என்பது அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது. கர்நாடகாவில் நடைமுறையில்ல இருக்கும் மாடலை தான் விஜய் அரசு பயன்படுத்தப்பட உள்ளது.

அதாவது தனியார் நிறுவனங்கள் மதுபான கடைகளை நடத்த வேண்டுமாயின் அரசிடம் இருந்து இதற்கான உரிமம் பெற வேண்டும், இதன் மூலம் அரடுக்கு வருமானம் கிடைக்கும். வழக்கம் போல் மதுபான விற்பனைக்கு வரி வருமானமும் கிடைக்கும்.

இத்திட்டத்தின் படி தமிழ்நாட்டில் நகரப்புறங்களில் இருக்கும் 2500 கடைகளை மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது. மீதமுள்ள கடைகள் அதாவது கிராமபுற கடைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களிலும் இந்த நடைமுறையில் தான் இயங்கி வருகிறது. இந்த வர்த்தக மாடல் வெற்றி அடைந்தால் பின்னாளில் கிராமபுற கடைகளையும் தனியாருக்கு கொடுத்துவிடவும் வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் உள்ளது.

தவெக அரசின் இந்த முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைத்து மதுவிலக்கை நோக்கி செல்ல வேண்டுமே தவிர இத்தகைய முடிவு சரியானது இல்லை என தெரிவித்தார்.

இதேவேளையில் இன்று மாலை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இனி கூடுதல் கட்டணத்திற்கு மதுபானத்தை விற்க மாட்டோம், MRP விலையில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இது மிகவும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

Vijay Govt to Privatise Urban TASMAC Shops After 23 Years – Major Policy Shift in Tamil Nadu

Vijay Govt to Privatise Urban TASMAC Shops After 23 Years – Major Policy Shift in Tamil Nadu — TASMAC: முதலில் எந்த கடைக்கு டார்கெட்.. 23 வருடத்திற்கு பின்.. விஜய் கொண்டு வரும் மிகப்பெரிய மாற்றம்..!

Story first published: Wednesday, July 29, 2026, 20:18 [IST]

Other articles published on Jul 29, 2026

Read More

Previous Post

Tamilmirror Online || யாழ்தேவியுடன் மோதிய மாடு: ரயில் சேவையில் இடையூறு

Next Post

kuil haram என்று நான் கூறியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்: அன்வார் | Makkal Osai

Next Post
kuil haram என்று நான் கூறியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்: அன்வார் | Makkal Osai

kuil haram என்று நான் கூறியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்: அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin