
டி.கே.ஜி.கபில
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடும் மழை காரணமாக, தரையிறங்குவதற்காக வருகை தந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வான்பரப்பில் வட்டமிட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நேற்று (மார்ச் 31) இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக
- சீனாவின் குன்மிங்கில் இருந்து வருகை தந்த சைனா ஈஸ்டர்ன் (China Eastern) விமானம்.
- டுபாயில் இருந்து வருகை தந்த எமிரேட்ஸ் (Emirates) விமானம்.
- தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து வருகை தந்த எயார் ஏசியா (Air Asia) விமானம்.
- மெல்பேர்ன், சென்னை மற்றும் லாகூர் ஆகிய நகரங்களில் இருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானங்கள். இக்கட்டான நிலைக்கு உள்ளாகின:
இவற்றில் சீனாவின் குன்மிங்கிலிருந்து இரவு 9.49 மணிக்கு கட்டுநாயக்கவில் தரையிறங்க வேண்டிய சைனா ஈஸ்டர்ன் விமானம், சுமார் ஒரு மணிநேரம் வான்பரப்பில் வட்டமிட்டது. இறுதியில் அந்த விமானம் இரவு 10.50 மணியளவில் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

