இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள், அதாவது 2025 ஜனவரி முதல் ஜூன் 30 வரை, மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இன்று தெரிவித்தார்.
ஜனவரி 1 முதல் ஜூன் 30, 2025 வரை மருத்துவமனையில் 6,700 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்லவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தினமும் சராசரியாக 950 முதல் 1,000 நோயாளிகள் கிளினிக்குகளுக்கு வருவதாகக் கூறினார்.