• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 36 மணிநேரம் கவனம் : மக்களுக்கு எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 14, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || 36 மணிநேரம் கவனம் : மக்களுக்கு எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





இலங்கையின் அனர்த்த நிலைமை மற்றும் காலநிலை அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.  2026.05.13 மாலை 6:00 மணி முதல் 2026.05.14 காலை 6:00 மணி வரையான காலப்பகுதிக்கான அந்த விரிவான நிலைமை அறிக்கையில்…

பாதுகாப்பு மையங்கள் மற்றும் இடர்நிலை:


புத்தளம் மாவட்டம்: புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1264 நபர்கள் 06 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டம்: 13 பாதுகாப்பு மையங்களில் 369 குடும்பங்கள் (1003 நபர்கள்) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டம்: 02 பாதுகாப்பு மையங்களில் 18 குடும்பங்கள் (61 நபர்கள்) உள்ளனர்.

கேகாலை மாவட்டம்: 02 பாதுகாப்பு மையங்களில் 43 குடும்பங்கள் (133 நபர்கள்) உள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்: 01 பாதுகாப்பு மையத்தில் 35 குடும்பங்கள் (140 நபர்கள்) உள்ளனர்.

காலநிலை முன்னறிவிப்பு:


இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 36 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ – 150 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

நீர் மட்டம் மற்றும் அணைக்கட்டுகள்:


களு கங்கை: களுத்துறை மாவட்டத்தின் மில்லகந்த (கலவெல்லாவ) பகுதியில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

அத்தனகலு ஓயா: தன்னாமலே பகுதியில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

அணைக்கட்டுகள்: இராஜாங்கனை (04 வான்கதவுகள்), லுணுகம்வெஹெர (09 வான்கதவுகள்), வெஹெரகல மற்றும் தெதுரு ஓயா (தலா 04 வான்கதவுகள்) ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் தடைகள்:


மாத்தளை: ரிவஸ்டன்   பகுதியில் பாதிப்படைந்த வீதிகள் தற்போது இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளன.

கண்டி: தலத்து ஓயா வீதியின் உடதெல்தொத்த பாலம் இடிந்து விழுந்தமையால் அவ்வீதி மூடப்பட்டுள்ளது.

புகையிரத சேவை: மன்னாரிலிருந்து மதவாச்சி வரையான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மலையகப் புகையிரதப் பாதையில் ரம்புக்கணை முதல் அம்பேவெல வரை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது; அம்பேவெலை முதல் பதுளை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்குகின்றன.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்: இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


 


 



Read More

Previous Post

“மலேசியாவில் வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம், அதன் பயன்பாட்டு அளவும் திறன் மேம்பாட்டு (reskilling) முயற்சிகளும் சார்ந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.” – Malaysiakini

Next Post

பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை | Makkal Osai

Next Post
பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை | Makkal Osai

பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin