ஸ்ரீ ஜெயவர்தனபுர ,கோட்டே மோனார்க் இம்பீரியலில் நடைப்பெற்ற ‘SLIM-KANTAR’ மக்கள் விருது விழாவில் எமது சகோதர பத்திரிகையான “லங்காதீப ” தொடர்ந்து 19வது முறையாகவும் மிக பிரபல பத்திரிகைக்கான விருதை வென்றுள்ளது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் துணைத் தலைவர் (கல்வி) பேராசிரியர் ஜெயந்த டி.என். தேவசிறிவினால் “ஞாயிறு லங்காதீப” தலைமை ஆசிரியர் காஞ்சன தசநாயக்க மற்றும் “லங்காதீப” தலைமை ஆசிரியர் அஜந்த குமார அகலகட ஆகியோரிடம் குறித்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருது விழாவை இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) மற்றும் ‘Sri Lanka KANTAR” இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


