சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சித் தொகையுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று இன்று (01), இரகசிய தகவலின் அடிப்படையில் கற்பிட்டி, கண்ட குடாவ பகுதியில் சோதனை நடத்தியது.
இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1839 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்து, சந்தேக நபர்கள் லாறியுடன் கைது செய்யப்பட்டனர்.


