முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொக்குளாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் வெள்ளத்தில் அகப்பட்ட 16 விவசாயிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
இப் பகுதியில் வேலைக்குச் சென்ற விவசாயிகள் நெல் வயல்களுக்கு இரவு கண்காணிப்புப் பணிக்காகச் தங்கியிருந்தனர். இதன்போது திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, அவர்களால் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது.
இவ. விடயம் கிராம மீனவர்கள் மற்றும் கொக்குத்தொடுவாய் சமூக சேவை மைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து நேற்று (27) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் அனைவரும் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். (a)


