வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் இருந்து 103 கிலோக் கிராம் கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினரினால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை கரவெட்டியில் உள்ள விசேட அதிரடிப்படையினர் மேற்படி பகுதியில் சோதனை நடத்தினர்.
இதன்போது 54 பொதிகளில் இருந்த 103 கிலோ கஞ்சா மீட்க்கப்பட்டு மருதங்கேணி பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருத்தங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (a)