• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு இன்று (08) முற்பகல் மலரஞ்சலி செலுத்தினார்.


கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி டோ லாமை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அன்புடன் வரவேற்றார். இதன்போது, இரு நாடுகளினதும் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்த சிறுவர்கள், வியட்நாம் ஜனாதிபதிக்குத் தமது மரியாதையைச் செலுத்தினர். ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய வியட்நாம் ஜனாதிபதிக்கு, பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் இதன்போது கையளிக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து, கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள “வியட்நாம் – ஹோ சி மின் வளாகத்தை” (Vietnam-Ho Chi Minh Space) விரிவாக்கம் செய்யும் பணிகளை ஆரம்பித்து வைத்த வியட்நாம் ஜனாதிபதி, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத் தொகுப்பைப் பார்வையிட்டார்.


பொது நூலகத்தின் பிரதம நூலகர் வருணி கங்கபடஆரச்சியினால், ஹோ சி மின் வளாகத்தை நவீனமயப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்யும் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக வியட்நாமின் கணக்காய்வாளர் நாயகம் நெகுயென் ஹூ ன்கியா (Nguyen Huu Nghia), கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரிடம் 50,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கினார்.


இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.




Read More

Previous Post

ரயில், எரிசக்தி, எல்லை தாண்டிய பாதுகாப்பிற்காக மலேசியாவும் தாய்லாந்தும் கைகோர்க்கின்றன | Makkal Osai

Next Post

Gold Price | அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? வங்கி வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price | அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? வங்கி வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்! | வணிகம் போட்டோகேலரி

Gold Price | அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? வங்கி வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin