பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக சிகிச்சைக்காக நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணை பிரிவின் காவலில் உள்ள ஹரக் கட்டா, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சி.டி ஸ்கேன் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வயிற்று வலி காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. R