• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வெளியேறியது அமெரிக்கா: ட்ரம்ப் அதிரடி

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || வெளியேறியது அமெரிக்கா: ட்ரம்ப் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதல் நாளில் அவர் பிறப்பித்துள்ள உத்தரவுகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.


78 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க நாட்டின் 47-வது ஜனாதிபதியாக பங்கேற்றார். ‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது’ என அதிபராக பொறுப்பேற்ற பின்னர் பேசிய தனது முதல் உரையில் தெரிவித்தார். அதற்காக தான் கடவுள் தனது உயிரை காத்துள்ளார் என தனது உணர்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.


கடந்த 2021-ல் அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட விவகாரத்தில் ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது போலீஸ் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இந்நிலையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதும் அந்த குற்றச்சாட்டுக்கு ஆளான சுமார் 1,500 பேருக்கு மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.


 


HinduTamil17thJanHinduTamil17thJan


 அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில் அதை தேசிய அவசர நிலையாக அறிவித்து, அந்த உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். மேலும், அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை குறைந்தது நான்கு மாதங்கள் வரை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளார். ‘அதிக அளவில் புலம்பெயர்ந்து வரும் மக்களை ஏற்கும் திறன் அமெரிக்காவுக்கு இல்லை’ என ட்ரம்ப் தெரிவித்தார்.


 முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சி நிர்வாகத்தில் அமல் செய்யப்பட்ட சுமார் 78 நடவடிக்கைகளை ட்ரம்ப் ரத்து செய்தார்.


அமெரிக்காவில் டிக்டாக் செயலி மீதான தடையை 75 நாட்கள் தாமதப்படுத்தும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.


எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினருக்கு முந்தைய ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். பைடன் ஆட்சியில் நடைமுறைக்கு வந்த ஓஇசிடி வரி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்திலும் ட்ரம்ப் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.


அமெரிக்காவின் வெளிநாட்டு மேம்பாட்டு உதவித் திட்ட பொறுப்பாளர்களாக உள்ள அனைத்து துறை மற்றும் நிறுவனத் தலைவர்களும் உடனடியாக மேம்பாட்டு நிதி உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


இதோடு உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த போதும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பைடன் ஜனாதிபதி ஆனதும் அதில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது. தற்போது அமெரிக்கா அதிலிருந்து மீண்டும் வெளியேறி உள்ளது.


 பிப்ரவரி 1-ம் திகதி முதல் கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்த போது தெரிவித்தார். அதே நேரத்தில் சீனாவுக்கு 60 சதவீத வரி விதிப்பது குறித்து அவர் எதுவும் பேசவில்லை. அண்மையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ட்ரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


 பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். மேலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டும் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதைத் தொடர்ந்தால் தனது தலைமையிலான நிர்வாகம் அதே அளவிலான வரியினை இந்திய பொருட்களின் மீது விதிக்கும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.


 



Read More

Previous Post

திருப்பதியில் பிப்.4-ம் தேதி முதல் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் மசால் வடை | Makkal Osai

Next Post

ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை கொள்ளையடித்து சென்ற திருடர்கள்.. விசித்திரமான திருட்டு சம்பவம்!

Next Post
ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை கொள்ளையடித்து சென்ற திருடர்கள்.. விசித்திரமான திருட்டு சம்பவம்!

ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை கொள்ளையடித்து சென்ற திருடர்கள்.. விசித்திரமான திருட்டு சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin