த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று நேற்று வாக்கு சேகரித்தார். பின்னர், அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்கள் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக குமரி, திருப்பூர், சென்னை, திருச்சி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
2026 தேர்தல் என்பது தி.மு.க, அ.தி.மு.க. மட்டுமல்ல, விஜய்யின் த.வெ.கவுக்கும் முக்கியமான தேர்தல் என்பதால் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
நேற்று எந்த ஒரு பெரிய முன்னறிவிப்பும் இல்லாமல் த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்துள்ளார். த.வெ.க. தேர்தல் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்துள்ளார். பின்னர், அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்கள் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.
மேலும், பெரம்பூரில் உள்ள அலுவலகத்தில் தொகுதி வளர்ச்சி குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பெரம்பூர் தொகுதிக்கான த.வெ.க. தேர்தல் அலுவலகத்தில் விசில் சின்னத்தை கோலமிட்டுள்ளார். விஜய்யின் ‘சர்ப்ரைஸ் விசிட்’ அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக மாறியுள்ளது. (a)


