சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் திரிஷா கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் இந்த புகைப்படம், தொழில்நுட்ப ரீதியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராம் குமார் (@RamVJ2412) என்பவர் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்த புகைப்படம் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் திகதி காலை 8.05 மணிக்கு எடுக்கப்பட்டதாகப் பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த புகைப்படத்தை உற்று நோக்கிய நெட்டிசன்கள், அதில் ஒரு முக்கியமான தொழில்நுட்ப முரண்பாட்டைக் கண்டறிந்துள்ளனர்.

அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள iPhone 17 Pro Max என்ற மொபைல் போன், சந்தையில் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதிதான் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தில், எதிர்காலத்தில் வரவிருந்த ஒரு சாதனம் எப்படி இடம்பெற்றிருக்க முடியும் என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

இந்த முரண்பாடு, இந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல என்பதையும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பதையும் உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் ஆக்கபூர்வமாக இருந்தாலும், மறுபுறம் இது போன்ற போலியான பிம்பங்களை உருவாக்கி, வதந்திகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதளங்களில் வரும் எந்தவொரு தகவலையும் அல்லது புகைப்படத்தையும் அப்படியே நம்பிவிடக் கூடாது. ஒரு தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல் பரப்பும்போது, அது தேவையற்ற குழப்பங்களை உருவாக்குகிறது. எனவே, டிஜிட்டல் உலகில் தகவல்களைப் பகிரும் முன், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு பயனாளரின் பொறுப்பாகும்.

