• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ அட்வைஸ்

GenevaTimes by GenevaTimes
December 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ அட்வைஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்க்கு,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)   பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அரசியல் தொடர்பான முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.


நடிகராகப் புகழ்பெற்ற விஜய், 2024 பெப்ரவரி 2-ஆம் திகதி அரசியலில் அதிகாரப்பூர்வமாகக் களமிறங்கி, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தற்போது அவர் தீவிர பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


 


இந்த நிலையில், கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, விஜய் மற்றும் அவரது கட்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்கள் வழி மட்டுமின்றி, நேரடியாக களத்தில் இறங்கி மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.


 


 


இதனிடையே, இந்தியா டுடே ஊடகத்திற்கு நாமல் ராஜபக்ஷ அளித்த பிரத்யேக பேட்டியில், விஜய் குறித்து கருத்து தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது, “விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவரது சினிமா பயணத்தை கவனித்து வருகிறேன். ஆனால், ஒரு அரசியல்வாதியாக அவர் இன்னும் முழுமையாக பக்குவம் அடையவில்லை. விஜய் அரசியலில் நுழைந்தது, எல்லைகளைத் தாண்டி கவனத்தை ஈர்த்துள்ளது.


இருப்பினும், அதன் நம்பகத்தன்மை அவரது செயல்பாடுகளில்தான் வெளிப்படும். அவரது வருகை தமிழக அரசியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், பொதுப் பிரச்னைகள் சினிமா கதைகளைவிட மிகவும் சிக்கலானவை. அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் அல்ல; அது ஒரு முழுநேர பொறுப்பு. மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும், அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசியல்வாதிகளுக்கு உள்ளது.


விஜய் அரசியலை மிகவும் தீவிரமாக அணுக வேண்டும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நிஜ வாழ்க்கை சிக்கல்கள், திரையில் காட்டப்படுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அரசியல் சினிமாவைவிட மிக அதிகமாக உணர்திறன் கொண்டது” என்றார்.



Read More

Previous Post

தைவானை சுற்றி ராணுவ பயிற்சி நடத்தும் சீனா – போர் பதற்றம் அதிகரிப்பு | Makkal Osai

Next Post

குறைவான மைலேஜ் கொடுத்ததால் விரக்தி: ஷோரூம் வாசலில் மின்சார ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய நபர் | Makkal Osai

Next Post
குறைவான மைலேஜ் கொடுத்ததால் விரக்தி: ஷோரூம் வாசலில் மின்சார ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய நபர் | Makkal Osai

குறைவான மைலேஜ் கொடுத்ததால் விரக்தி: ஷோரூம் வாசலில் மின்சார ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய நபர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin