
சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுக்குமான கூட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,’சிறைச்சாலைகளின் செயல்பாடுகளை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது, ஆனால் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இதுகுறித்த விவரங்களை வெளிப்படுத்த முடியும்,’ என்றார்.

