
அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள ‘ராயல் கன்ட்ரி மொபைல் ஹோம்ஸ்’ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான யிர்சி மச்சாடோ ரிவேரா . இவருடைய கணவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக இவர் சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த மச்சாடோ ரிவேரா, சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.
கதவைத் திறந்தவுடன் அண்டை வீட்டுப் பெண்ணைக் கடுமையாகத் திட்டிய மச்சாடோ ரிவேரா, அனுமதியின்றிப் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தான் பழிவாங்கும் நோக்கத்தோடு மனிதக் கழிவுகளை ஒரு வாளியில் சேகரித்து வைத்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் காவல்துறை வாக்குமூலப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காவல்துறையினரிடம் விசாரணைக்குப் பிறகு பேசிய மச்சாடோ ரிவேரா, தனது வீட்டில் கழிவறை பழுதாகியிருந்ததால் கழிவுப்பொருளை அப்புறப்படுத்த மட்டுமே சென்றதாகவும், அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் தன்னை மட்டையால் தாக்கியதாகவும் மாற்றுக்கதை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் மச்சாடோ ரிவேராவைக் கைது செய்துள்ள மயாமி-டேட் ஷெரிப் அலுவலக அதிகாரிகள், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

