அரசியல் பழிவாங்கல்களைத் தவிர அரசாங்கத்தால் வேறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல் தலைவர்கள் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். R

