
நேற்று (21) மாலை நுவரெலியா போம்புருஎல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, நுவரெலியா தீயணைப்பு பிரிவினர், இலங்கை இராணுவத்தினர் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த தீயணைப்பு நடவடிக்கையினால் சுமார் அரை மணி முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தத் தீயினால் சுமார் அரை ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்களை முன்னிட்டு, வனப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வனப்பகுதிகளில் தீ பரவும்போது அங்கு வாழும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பு கருதி விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரக்கூடிய அபாயமும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

