டித்வா சூறாவளியினால் சேதமடைந்திருந்த வடக்கு ரயில் மார்க்கம் புனரமைக்கப்பட்டு கொழும்பு கல்கிசை காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் இன்று(09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புனரமைப்பு பணிகளுக்காக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்காலிகமாக புனரமைக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில்கள் குறைந்த வேகத்துடனேயே பயணித்தன.

சேதமடைந்த பகுதிகளை முழுமையாக புனரமைப்பதற்காக வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் கடந்த ஜனவரி 19ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்திய அரசின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்பில் இந்த மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நிதர்ஷன் வினோத்

