ஹொரணையில் 3 கோடி 50 இலட்சம் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணையில் உள்ள மக்கள் வங்கியின் ATM இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக தயாராகி கொண்டிருந்த வேளை இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பையில் இருந்த சுமார் 3 கோடி 50 இலட்சம் பணத்தை, குறித்த நபர் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில் வங்கியின் உதவி முகாமையாளர் ஒருவர் உட்பட இருவர் இன்று மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். R

