சிறிய ரக லொறியும் வானும் மோதியதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (17) மதியம் 2.00 மணிக்கு ஹட்டன் குடாகம இஸ்லாமிய பள்ளி அருகில் இடம் பெற்று உள்ளது என ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த மூவரும் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (a)


