ஹிக்கடுவ நகருக்கு அருகில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
57 வயதான லிதுவேனியாவைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீராடச் சென்ற வெளிநாட்டவர் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். R