சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களில் நிலவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை விலையை அதிகரிக்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இம்மாதம் (மே) வீட்டு உபயோக லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வருமாறு:
- 12.5 கிலோ கிராம்: ரூபாய் 4,765
- 5 கிலோ கிராம்: ரூபாய் 1,910
- 2.3 கிலோ கிராம்: ரூபாய் 890
மேற்கூறப்பட்ட விலைகளிலேயே எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என சன்ன குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


