• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ரீ-சேர்ட்டு அணிந்து வந்தால் கவனம்: நூதன மோசடி

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ரீ-சேர்ட்டு அணிந்து வந்தால் கவனம்: நூதன மோசடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT), மஹரகம உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வகை நிதி மோசடி குறித்துப் பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பிரபல மொபைல் தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகள் போலத் தோற்றமளிக்கும் ஒரு குழுவினர், நிறுவன முத்திரையிடப்பட்ட ரீ-சேர்ட்டுகளை (T-shirts) அணிந்து வீதிகளில் செல்லும் மக்களை அணுகுகின்றனர். அவர்களிடம் தற்போது பயன்படுத்தும் தொலைபேசிச் சேவை, மாதந்தரக் கட்டணம் மற்றும் பயன்பாட்டு முறைகள் குறித்துக் கேட்டறிகின்றனர்.


பின்னர், “மாதம் 2,000 அல்லது 3,000 ரூபாய் நிலையான கட்டணத்தில் அளவற்ற (Unlimited) அழைப்புகளைப் பேசலாம்” என்ற கவர்ச்சிகரமான புதிய பொதி ஒன்றை அறிமுகப்படுத்துகின்றனர். இதனைச் செயல்படுத்த ஒருமுறை மட்டும் 5,000 ரூபாவை ‘பதிவுக் கட்டணமாக’ செலுத்துமாறு கோருகின்றனர்.


பணத்தைச் செலுத்தியவுடன், பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிக்கு ஒரு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி (Confirmation SMS) அனுப்பப்படுகிறது. இதனால் இது உண்மையான சேவை என்று மக்கள் நம்புகின்றனர். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு தொலைபேசிப் பில்களில் தேவையற்ற மேலதிகக் கட்டணங்கள் வரும்போதோ அல்லது மேலதிகப் பணம் செலுத்தாமல் சேவை துண்டிக்கப்படும்போதோதான் தாம் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்கின்றனர்.


தனிநபர் இழப்பு 5,000 ரூபாய் என்ற அளவில் சிறியதாகத் தோன்றினாலும், அதிகளவிலான மக்கள் இந்த மோசடியில் சிக்கி வருவதாக SLCERT தெரிவித்துள்ளது.


வீதிகளில் மொபைல் பொதிகள் அல்லது சிம் கார்டுகளை வழங்கும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறும், அவர்கள் அந்தந்த நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளா என்பதைச் சரிபார்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இவ்வாறான மோசடிகள் கொழும்புக்கு வெளியேயுள்ள ஏனைய பகுதிகளுக்கும் விரிவடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


 


 



Read More

Previous Post

பாலியல் துன்புறுத்தல் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தோல்வி | Makkal Osai

Next Post

IPL 2026 | ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்… இந்த ஆண்டு என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IPL 2026 | ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்… இந்த ஆண்டு என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? | விளையாட்டு போட்டோகேலரி

IPL 2026 | ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்... இந்த ஆண்டு என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin