ரஷ்யா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov உடன் நேற்று (10) இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, சுற்றுலா, உயர்கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த இரு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் சப்ரி, ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கை பிரஜைகளின் பிரச்சினையை ரஷ்ய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவியை நாடினார்.
இது தொடர்பில், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான இலங்கை உயர்மட்டக் குழுவிற்கும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் இடையில் எதிர்வரும் 26 – 27ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் இவைகளை மீளாய்வு செய்ய இணக்கம் காணப்பட்டது.
அமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் இருந்து மேலும் ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

