நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை (21) காலை முதல் கொழும்பில் இருந்து புத்தளம் வரையான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – புத்தளம் ரயில்வே தற்போது கொழும்பில் இருந்து புத்தளம் வரை ஒரு நாளைக்கு நான்கு ரயில்களையும் புத்தளத்திலிருந்து கொழும்பு வரை நான்கு ரயில்களையும் இயக்குகிறமை குறிப்பிடத்தக்கது.

