நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

சிறைச்சாலை வளாகத்தின் தற்போதைய சூழ்நிலைகளையும் கைதிகளின் தேவைகளையும் நேரில் ஆய்வு செய்த அமைச்சர், சிறைச்சாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்த ஆய்வுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா மற்றும் யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

