
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை ஒருதலைப்பட்சமாக ஆராய கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன் விதான இன்று தீர்மானித்தார்.
மைத்திரிபால சிறிசேனவுக்காக நீதிமன்றில் ஆஜராக சட்டத்தரணி இல்லாத காரணத்தினால், இந்த வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கைத் தாக்கல் செய்திருப்பதுடன், நீதிமன்றமும் சிறிசேனாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் கலாசார அமைப்பாளருமான முண்டிகு சரச்சந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போதே இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

