
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியை இலங்கை வென்றிருந்ததுடன், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், ஜமைக்காவில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெறவிருந்த மூன்றாவது போட்டியும் மழையால் கைவிடப்பட்ட நிலையிலேயே தொடரை 1-0 என்ற ரீதியில் இலங்கை கைப்பற்றியது.

