முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (24) ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரின் விளக்கமறியலும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஒரு தனியார் தரப்பினருக்கு சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) மேர்வின் சில்வா, மார்ச் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.