
இலங்கை மீன்வளத் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் (CFHC) முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2014 ஆம் ஆண்டு சேனாரத்ன மீன்வள அமைச்சராக இருந்தபோது மோதரை மீன்வளத் துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதற்காக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உபாலி லியனகே மற்றும் மற்றொருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், அவர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்., சந்தேக நபருக்கு 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளுடன் பிணை வழங்கினார்.

