ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரை 200,000 ரூபா பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியந்த மாயாதுன்னே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு குருநாகலில் நடைபெற்ற நிகழ்வுக்கு அரச நிதியில் இருந்து 183 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியமைக்காக பிரியந்த மாயாதுன்னே கைது செய்யப்பட்டதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.
பிரியந்த மாயாதுன்னேவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று பிலியந்தலையில் வைத்து கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

