அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திங்கட்கிழமை (20) முதல் முட்டைகளின் விலையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. உற்பத்திப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் தீவனத் தட்டுப்பாடு காரணமாகவே இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திங்கட்கிழமை (20) முதல் ஒரு வெள்ளை முட்டை 41 ரூபாவிற்கும், ஒரு சிவப்பு முட்டை 42 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, “சோளத் தட்டுப்பாடு மற்றும் கோழித் தீவன விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய சவால்கள் காரணமாக முட்டை உற்பத்தியானது 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் விளைவாக, சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

