அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் நேற்று வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இதில் மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R

