யாழ்ப்பாணம், சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வியாழக்கிழமை (14) வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


