
கொழும்பு, மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள விழா மண்டபம் ஒன்றில் திங்கட்கிழமை (17) தீ பரவியுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை முழுமையாக அணைத்ததாகவும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விழா அரங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

