
டி.கே.பி.கபில
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திd; “கிரீன் சேனல்” வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் ரூ.68,85,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளை கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், சனிக்கிழமை (17) அன்று மாலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
பாணந்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒரு டிக்கெட் விற்பனையாளர்.அவர் சனிக்கிழமை (17) அன்று 05.00 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-654 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
03 சூட்கேஸ்களில் 44,400 வெளிநாட்டு தயாரிப்பு “மான்செஸ்டர்” மற்றும் “பிளாட்டினம்” சிகரெட்டுகள் மற்றும் 15 மின்னணு சிகரெட்டுகள் அடங்கிய 222 சிகரெட் அட்டைப்பெட்டிகளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

