
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணையொன்றுடன் தொடர்புடைய வகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, வௌ்ளிக்கிழமை (04) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்து கதிரைகளை கொள்வனவு செய்தபோது ஏற்பட்ட மோசடி தொடர்பிலான விசாரணைகளின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

