மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த சிவம் பாக்கியநாதன் தெரிவாகியுள்ளார்.
மட்டு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் புதன்கிழமை (11) அன்று காலை இடம்பெற்றது.
அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த சிவம் பாக்கிய நாதன் மட்டக்களப்பு மாநகர சபை மேயராக தேர்வு செய்யப்பட்டார் மேயர் தெர்விற்கு மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்திருந்த துடன் கட்சியின் முக்கியஸ்தர்களும் வருகை தந்திருந்தனர் .
மட்டக்களப்பு மாநகர சபை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவம் பாக்கியநாதன் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளராகும் என்பது குறிப்பிடத்தக்கது .


எம் எஸ் எம் நூர்தீன்

