இரத்தினபுரி நகரை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, போதைப்பொருள் உட்கொண்டு பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவை இணைந்து திங்கட்கிழமை (15) காலை இந்தச் சோதனைகளை முன்னெடுத்தன. இதன்போது, மொத்தம் 96 தனியார் பேருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் போதைப்பொருளை பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகளின் பேருந்துகள் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.


