லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவுக்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தல் நடைபெற்று வந்தது.
கடந்த 2 மாதங்களாக போதைப் பொருள்களை கடத்திவந்த 6 அதி விரைவு படகுகளை அமெரிக்க படைகள் கரீபியன் கடலில் சுட்டு வீழ்த்தின. இந்த படகுகள் வெனிசுலாவில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் கரீபியன் கடல் பகுதியில் இரவு நேரத்தில் ஒரு நீர்மூழ்கி கப்பல், பாதியளவு தண்ணீரில் மூழ்கியபடி வேகமாக சென்றுள்ளது. அதில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அது போதைப் பொருள்கள் கடத்தும் நீர்மூழ்கி கப்பல் என உறுதி செய்யப்பட்டவுடன் அதை நடுக்கடலில் அமெரிக்க படைகள் குண்டு வீசி தகர்த்தன. இந்த தாக்குதலில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய இருவர் உயிருடன் பிடிபட்டனர். அவர்கள் ஈக்குவடார் மற்றும் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. (a)