
பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் தாக்குதல் பிரிவைச் சேர்ந்த காவல்துறைக் காவலர் ஒருவர் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாகப் பாணந்துறை தெற்குத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேராதனை, முருதலாவப் பகுதியை வதிவிடமாகக் கொண்ட 28 வயதுடைய உடுகும்புரே கெதர மிலான் தில்ஹார என்ற காவல்துறைக்காவலரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் கடமைக்காகப் பெற்றுக் கொண்ட டி-56 ரகத் துப்பாக்கியால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவரது மார்புப் பகுதியில் நான்கு தோட்டாக்கள் வரை துளைத்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளிருக்கலாம் எனத் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த காவல்துறைக்காவலரும் மற்றுமொரு காவல்துறைக்காவலரும் வலான ஊழல் ஒழிப்புத் தாக்குதல் பிரிவின் பிரதான நுழைவாயில் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர் அதிகாலை 4:00 மணியளவில் காவல் குடிலுக்கு முன்பாக உள்ள மதிலுக்கு அருகில் வைத்து இந்தச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமை தெரியவந்துள்ளது.

