
குண்டசாலை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி, நுவரெலியாவிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி நுவரெலியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, அம்பாறை வைத்தியசாலையின் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) ஒருவரைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களுக்கு அமைய, இந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

