கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192-ஆவது வருடாந்த திருவிழா, புதன்கிழமை (03) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடியேற்ற நிகழ்வுக்கு முன்னதாக, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விசேட கூட்டுத் திருப்பலிகள் (பூசைகள்) ஒப்புக்கொடுக்கப்பட்டன. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 11-ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு விசேட நவநாள் வழிபாடுகளும் தியானப் பிரசங்கங்களும் திருத்தலத்தில் நடைபெறவுள்ளன.













