
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக திருமதி கே.டி.ஆர்.ஓல்காவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவினால் திருமதி ஓல்காவிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

