
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது, மேடையில் மணமகன் மற்றும் மணமகளைப் புகைப்படக் கலைஞர் (Photographer) புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, புகைப்படம் எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, மணமகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு அவர் கேட்டுள்ளார். இதற்கு மணமகள் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் புகைப்படக் கலைஞரைக் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து, மணமகள் மற்றும் மணமகன் வீட்டாருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அது இரு தரப்பினருக்கும் இடையிலான கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் மேசைகள் மற்றும் நாற்காலிகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.
இந்தத் திடீர் மோதல் காரணமாகத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

